புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என சார்க் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என சார்க் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:நமது கிரகம் கொரோனா வைரசை எதிர்த்து வருகிறது. பல மட்டங்களில், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசுகளும், மக்களும் தங்களால் முடிந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச மக்கள்தொகையில் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் தெற்கு ஆசியாவில், நமது மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்யும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விடக்கூடாது.