கடந்தாண்டு ஆக., மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆக., 5ல் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர், இருவர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அவரை விடுவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், வீட்டுக்காவலில் இருந்து பரூக் அப்துல்லாவை வைப்பதற்கான உத்தரவை காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு விலக்கி கொண்டது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.